வானிலை ஆய்வு மையம் விடுத்திருந்த ரெட் அலர்ட் எச்சரிக்கை வாபஸ்..!

தமிழகத்தில் அதீத கனமழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் விடுத்திருந்த ரெட் அலர்ட் எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டுள்ளது.

வரும் 7-ஆம் தேதி தமிழகத்தில் அதீத கனமழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. 7-ஆம் தேதி 25 செ.மீட்டருக்கும் அதிகமான மழை பெய்யும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதனால் தமிழகத்தில் நிவாரண முகாம்களை தயார் நிலையில் வைத்திருக்கவும் அறிவுறுத்தப் பட்டது. மக்கள் அபாயகரமான இடங்களுக்கு செல்ல வேண்டாம் எனவும் கூறப் பட்டது. இதையடுத்து தமிழகம் முழுவது பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் கடலுக்கு சென்றவர்களை திருப்பி அழைக்கவும் முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்த ரெட் அலர்ட் எச்சரிக்கை வாபஸ் பெறப்படுவதாக வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் இன்றுதெரிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறும்போது, ’ 6 மாவட்டங்களுக்கு விடப்பட்டிருந்த ரெட் அலர்ட் எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்படுகிறது. மீனவர்கள் குமரி, லட்சத்தீவு கடல் பகுதி, மத்திய தென்கிழக்கு அரபி கடல் பகுதிகளுக்குச்செல்ல வேண்டாம் .வரும் 8 ஆம் தேதி வரை கனமழை பெய்யும். சென்னை உட்பட ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருக்கிறது’ என்று தெரிவித்தார்.

Leave a Response