தகாத உறவு குற்றமல்ல என்ற தீர்ப்பு நியாயமானதே- கமல்ஹாசன் பரபரப்பு பேட்டி..!

கள்ளக்காதல் குற்றமல்ல என உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு நியாயமானதே என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.

கள்ளக்காதலில் ஆண்கள் ஈடுபட்டால் அவர்களுக்கு இந்திய தண்டனை சட்டம் 497 பிரிவின் படி 5 ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்டு வந்தது. ஆனால் கள்ளக்காதலில் பெண்கள் ஈடுபட்டால் அவர்களுக்கு தண்டனை ஏதும் வழங்கப்படுவதில்லை.

எனவே இந்த சட்டத்தை நீக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் கள்ள உறவு என்பது குற்றமல்ல. மற்றவர்களை தற்கொலைக்கு தூண்டும் வரையில் அது குற்றமல்ல என தெரிவித்தனர்.

இதற்கு பெரும்பாலானோர் வரவேற்பும், எதிர்ப்பும் தெரிவித்தனர். இதுகுறித்து நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் சென்னையில் தண்டோரா அடிக்கும் நிகழ்ச்சியை தொடங்கிவைத்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், காந்தியின் 150-ஆவது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக ஊரெங்கும் தண்டோரா போட்டு கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும்.

ஆனால் அதை அரசு சரிவர செய்யவில்லை. மக்கள் நீதி மய்யம் அதை செய்யவிருக்கிறது. கிராமங்களை பலப்படுத்த வேண்டும். கிராம சபை கூட்டங்கள் எங்கும் சரிவர நடப்பதில்லை. மக்கள் பங்கேற்பை அதிகரிக்க வேண்டும் என்பதுதான் எங்கள் கருத்து.

அதன்படி அக்டோபர் 2ஆம் தேதி நடக்கும் கிராம சபை கூட்டத்தில் எம்பி, எம்எல்ஏக்கள் கலந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் மக்கள் என்ன குறை கூறுகிறார்கள் என்பது தெரிய வரும். அங்கு எடுக்கப்படும் தீர்மானத்தின் நகல் எங்கள் கையெழுத்துடன் தர மறுக்கிறார்கள்.

என்னுடைய கட்சி 3 அமாவாசைக்குள் காணாமல் போய்விடும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியதை குறித்து கேட்கிறீர்கள். அமாவாசை பற்றி பேசுபவர்கள் அந்த கட்சியில் இருப்பவர்கள் நிஜமான சந்திரனை பார்த்ததில்லை. அவர்கள் ‘அம்மா’வாசைக்கு பிறகு வந்தவர்கள்.

தகாத உறவு குற்றமல்ல என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. நான் முன்னோக்கி செல்ல விரும்புகிறேன். தீர்ப்பு நியாயம்தான். புராணங்களில் கூட இந்த அளவு திறந்த மனது நமக்கு இருந்திருக்கிறது. இந்த நவீன காலத்தில் ஆண்களும் பெண்களும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பது பலரின் விருப்பமாகதான் இருக்கிறது.

சபரிமலைக்கு பெண்களும் செல்லலாம் என தீர்ப்பு வந்துள்ளது. விருப்பமுள்ளவர்கள் செல்லலாம். ஆண், பெண் அனைவரும் சமம். மக்கள் நீதி மய்யம் எந்த அளவு வளர்ந்திருக்கிறது என்பது எனக்கு தெரியும். உங்களஉக்கு தெரியாது. எத்தனை பேர் உறுப்பினர்கள் உள்ளார்கள் என்பதை உங்களுக்கு பிறகு சொல்கிறேன். எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கு எனக்கு அழைப்பிதழ் வரவில்லை என்றார் கமல்.

Leave a Response