ஆட்சியை கவிழ்க்க பாஜக முயற்சி செய்து வருகிறது-கர்நாடக முதல்வர் குமாரசாமி குற்றச்சாட்டு..!

ஆட்சியை கவிழ்க்க பாஜக முயற்சி செய்து வருகிறது. ஆனால் ஆட்சி அதிகாரம் எங்களிடமும் உள்ளது என்று பாஜகவுக்கு கர்நாடக முதல்வர் எச்.டி.குமாரசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கர்நாடகாவில் காங்கிரஸ் தயவுடன் மதசார்பற்ற ஜனதாதளம் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியை கவிழ்க்க பாஜக முயன்று வருவதாக குற்றச்சாட்டு கூறப்படுகிறது.

பா.ஜனதாவின் ‘ஆபரேஷன் தாமரை’ மூலம் காங்கிரசை சேர்ந்த சுமார் 20 எம்.எல்.ஏ.க்களை பாஜகவுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் பேசிவருவதாகவும், விரைவில் அந்த எம்.எல்.ஏ.க்கள் தங்களின் பதவியை ராஜினாமா செய்ய திட்டமிட்டு இருப்பதாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாக அங்கு அரசியல் பரபரப்பு நிலவி வருகிறது.

இதனால் கர்நாடகத்தில் நடைபெற்று வரும் கூட்டணி ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில முதலமைச்சர் குமாரசாமி, கூட்டணி ஆட்சியைக் கவிழ்க்க பாஜக தொடர்ந்து முயற்சித்து வருகின்றது, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 18 சட்டப்பேரவை உறுப்பினர்கள் மும்பைக்கு புறப்பட்டுவிட்டதாகவும், ஆட்சி கவிழ்ந்துவிடும் என்பதால் நீங்களும் அவர்களுடன் வாருங்கள் என்று மஜத சட்டப்பேரவை உறுப்பினர்களிடம் பாஜகவினர் பேசியுள்ளனர்.

ஆனால், ஆட்சி பாஜகவினரிடம் மட்டுமல்ல, எங்களிடமும் ஆட்சி அதிகாரம் உள்ளது. நாங்கள் நினைத்தால் என்ன வேண்டு மானலும் செய்வோம் என எச்சரிக்கை விடுத்தார். பாஜக மாநில தலைவர் எடியூரப்பா அரசியலில், அனுபவத்தில், வயதில் என்னைவிட மூத்தவர். அவர் நிதானத்துடன் பேச வேண்டும் என்ற குமாரசாமை, என்னையும் என் தந்தையையும் கொள்ளையர்கள் என அவர் பேசியுள்ளார். உண்மையில் அவர்கள் தான் மாநிலத்தை கொள்ளை அடித்தனர் என காட்டமாக கூறினார். தொடர்ந்து எங்கள் குடும்பம் மீது அவதூறு பேசிவந்தால் பாஜகவிற்கு எதிராக போராட்டம் நடத்த நானே மக்களுக்கு அழைப்பு விடுப்பேன். இவ்வாறு குமாரசாமி பேசினார்.

Leave a Response