திமுகவுக்கு இனி நான்தான் சவால்-அழகிரி ஆவேசம்..!

திமுகவுக்கு இனி நான்தான் சவால் என முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி தெரிவித்துள்ளார்.

திமுக தலைவராக பதவியேற்றுள்ள ஸ்டாலின் முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியை கட்சியில் சேர்க்க தயக்கம் காட்டி வருகிறார்.

இதனால் அழகிரி தரப்பு அப்சட்டாக உள்ளது. இந்நிலையில் தனது பலத்தை நிரூபிக்கும் வகையில் அழகிரி நேற்று முன்தினம் சென்னையில் அமைதி பேரணி நடத்தினார்.

இதில் ஸ்டாலின் ஆதரவாளர்களோ அல்லது கருணாநிதியின் குடும்பத்தை சேர்ந்தவர்களோ பங்கேற்கவில்லை. இதனால் கடும் கோபத்தில் உள்ளாராம் அழகிரி.

இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த அழகிரி, ஆர்கே நகர் தோல்விக்கு குருட்டுப்போக்கான நம்பிக்கை தான் காரணம் . ஜெயலலிதாவை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிட்ட பெண் வேட்பாளர் 57 ஆயிரம் ஓட்டுகள் வாங்கினார்.

அவரை மீண்டும் வேட்பாளராக்காமல் யாரையோ நிறுத்தினார்கள். ஜெயலிதாவை எதிர்த்தே 57 ஆயிரம் ஓட்டுகள் வாங்கிய திமுக, டிடிவி தினகரனை எதிர்த்து 24 ஆயிரம் ஓட்டுகள் வாங்கியது திமுகவின் சரிவு தான்.

என்னை கட்சியில் சேர்க்காதவரை நிச்சயமாக திமுக தேர்தல்களில் தோல்வியை தழுவும். இன்னும் கட்சியில் பின்னடைவை சந்திக்கும்.இனிமேல் திமுகவின் சவால் மு.க.அழகிரிதான். கண்டிப்பாக நான் தான் இனி திமுகவின் சவால். இவ்வாறு அழகிரி தெரிவித்தார்.

 

Leave a Response