திமுக காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில்தான் உள்ளது- திருநாவுக்கரசர்..!

திமுக காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில்தான் உள்ளது என்பதை ஸ்டாலினின் பொதுக்குழு உரை உறுதி செய்துள்ளது என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நாளை நடைபெறவுள்ள கருணாநிதியின் நினைவேந்தல் கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா பங்கேற்கவுள்ளார் என தகவல் வெளியானது. இதனால் அரசியலில் எதிரும் புதிருமாக உள்ள திமுகவும் பாஜகவும் நெருக்கம் காட்டுவதாக தமிழக அரசியல் கட்சிகள் விமர்சித்து வந்தன.

இந்நிலையில் நேற்று திமுக தலைவராக பதவியேற்ற ஸ்டாலின், தனது பொதுக்குழு உரையில் பாஜகவை கடுமையாக விமர்சித்தார். மதவெறியால் மத்திய அரசு மக்களாட்சி மாண்பை குலைக்கும் செயல்களில் ஈடுபடுகிறது, பாஜக அரசுக்கு தக்க பாடம் புகட்டுவோம் என்றார்.

இதனால் திமுக – பாஜக உறவு பழையபடிதான் உள்ளது என தெளிவானது. இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது, அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே நேரத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க வாய்ப்பு இல்லை. கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி கவிழும் என்ற பாஜகவின் ஆசை நிறைவேறாது.

திமுக-காங்கிரஸ் கூட்டணியில் இருப்பதை திமுக தலைவர் ஸ்டாலினின் பொதுக்குழு உரை உறுதிசெய்துள்ளது இவ்வாறு திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Leave a Response