செப்டம்பர் 13ம் தேதி திரைக்கு வரும் “சீமராஜா”..!

இயக்குநர் பொன்ராம்-சிவகார்த்திகேயன் கூட்டணியில் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் ஆகிய படங்களுக்கு பிறகு சீமராஜா படம் உருவாகியுள்ளது.

இயக்குநர் பொன்ராம் சிவகார்த்திகேயனை வைத்து 2 வெற்றிப்படங்களை கொடுத்துள்ளதால் சீமராஜா படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் நடிகர் சூரி நகைச்சுவை கூட்டணி அமைத்திருக்கிறார். மேலும் நாயகியாக சமந்தா நடித்துள்ளார். இவர்களுடன் பல நடிகர்கள் நடித்து வருகின்றனர்.

24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்த படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார்.  இப்படம் செப்டம்பர் மாதம் 13ம் தேதி திரைக்கு வரும் என படக் குழுவினரால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Response