தமிழகம் கொண்டு வரப்பட்டார் திருமுருகன் காந்தி-சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்..!

மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டு, தற்போது சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளார்.

மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி நேற்று அதிகாலை கைது செய்யப்பட்டார். பெங்களூர் விமான நிலையத்தில் இறங்கிய அவரை, குடிவரவு துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

இன்று அவர் தமிழக போலீசால் கைது செய்யப்பட்டு தமிழ்நாடு அழைத்து வரப்பட்டுள்ளார். நேற்று பெங்களூர் கிளம்பிய தமிழக போலீஸ் இரவோடு இரவாக அவரை அழைத்து வந்து இருக்கிறார்கள்.

பல முக்கிய பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட வாய்ப்புள்ளது.அவரிடம் பல முக்கியமான விஷயங்கள் குறித்து விசாரிக்க இருக்கிறார்கள்.

திருமுருகன் காந்திக்கு முன் லுக் அவுட் நோட்டிஸ் விடுக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட திருமுருகன் காந்தி, தமிழக போலீசால் சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

தேசவிரோத வழக்கு நிலுவையில் இருப்பதாக கூறி தற்போது திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு 15 நாள் காவல் கொடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Response