தடை நீங்கியது : விஸ்வரூபம்-2 படம் நாளை ரிலீஸ்..!

கமல்ஹாசன் இயக்கி நடித்துள்ள விஸ்வரூபம்-2 படம் நாளை அதாவது ஆகஸ்ட் 10-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது.

இந்தநிலையில், விஸ்வரூபம்-2 படத்திற்கு தடை கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்தவாரம் வழக்கு தொடரப்பட்டது. பிரமிட் சாய்மீரா என்ற பட நிறுவனம் வழக்கை தாக்கல் செய்திருந்தது. ‘மர்மயோகி’ என்ற திரைப்படத்தை இந்தி மற்றும் தமிழ் மொழிகளில் 100 கோடி பட்ஜெட்டில் தயாரிக்க, கடந்த 2008-ம் ஆண்டு நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனத்துடன் பிரமிட் சாய்மீரா நிறுவனம் ஒப்பந்தம் செய்ததாம்.

மர்மயோகி படத்தில் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி நடிக்க சம்மதம் தெரிவித்த கமலுக்கு முன்பணமாக 4 கோடி வழங்கப்பட்டதாகவும் சொல்லப்பட்டது.

4 கோடி பணத்தை வாங்கிய கமல், மர்மயோகி படத்தை எடுக்காமல் ‘உன்னைப்போல் ஒருவன்’ என்ற திரைப்படத்தை எடுத்தது தொடர்பாக கடந்த 2011-ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டு, அந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே, மர்மயோகி படத்துக்காக வாங்கிய ரூ.4 கோடியை, வட்டியுடன் சேர்த்து 5.44 கோடி வழங்க கமல்ஹாசனுக்கு உத்தரவிட வேண்டும். அதுவரை, விஸ்வரூபம்-2 படத்தை வெளியிட தடை விதிக்கவேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டது.

விஸ்வரூபம்-2 படத்துக்கு தடை விதிக்க வேண்டும். என்ற வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

Leave a Response