ஸ்டெர்லைட் ஆலையை இயக்க கூடாது, நிர்வாக பணியை செய்யலாம்-பசுமை தீர்ப்பாயம் உத்தரவு..!

ஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாக பணிகளை செய்யலாம், ஆனால் ஆலையை இயக்க கூடாது என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் 100 நாட்களாக போராடி வந்தனர். இந்த போராட்டத்தின் போது, மக்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியது. இந்த செயல் காரணமாக மொத்தம் 13 பேர் மரணம் அடைந்தனர்.

எதிர்ப்புகளை அடுத்து ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்காக அரசாணை வெளியிட்டு இருக்கிறது. இதற்கு எதிராக ஸ்டெர்லைட் நிர்வாகம் வழக்கு தொடுத்தது.

இந்த வழக்கு விசாரணை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நடந்து வருகிறது. இதில் மீண்டும் ஆலையை திறக்க அனுமதிக்க கோரி இன்று ஸ்டெர்லைட் நிர்வாகம் தரப்பில் வாதிடப்பட்டது. இதில் தேசிய பசுமை தீர்ப்பாயம் முக்கியமான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

அதில், ஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாக பணிகளை மேற்கொள்ள மட்டும் அனுமதி. இறுதி தீர்ப்பு வரும்வரை ஸ்டெர்லைட் ஆலையை இயக்க அனுமதி கிடையாது.

உள்ளே பராமரிப்பு பணிகளை நடத்தலாம். ஆனால் ஆலையை இயக்க கூடாது. உள்ளே முக்கியமான ஆவணங்களை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்று கூறி, வழக்கு விசாரணையை வரும் 20ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

Leave a Response