பா.ஜ.க : லோக்சபா தேர்தலில் தனித்து போட்டியிடும்-அமித்ஷா..!

2019 லோக்சபா தேர்தலில் தனித்து போட்டியிட தயாராகும் வகையில் பணிகளை தொடங்குமாறு மகாராஷ்டிரா பா.ஜ.வினரை அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா அறிவுறுத்தியுள்ளார்.

மும்பையில் நடைபெற்ற பா.ஜ.க , நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அமித்ஷா, கூட்டணியின்றி லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்களில் போட்டியிடுவதற்கான வாய்ப்புகளை எதிர்கொள்ளத் தயாராக இருக்குமாறு தெரிவித்துள்ளார். 48 லோக்சபா தொகுதிகளிலும், 288 சட்டசபை தொகுதிகளிலும் தேர்தல் பணிகளை தொடங்குமாறும் அறிவுறுத்தியுள்ளார். தற்போது பா.ஜ., வுக்கு 51 சதவீதம் ஓட்டு வங்கி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் தலா 25 பா.ஜ.க,வினரை பொறுப்பாளர்களாக நியமித்து பணிகளை முடுக்கிவிடும் படியும் அமித்ஷா அறிவுறுத்தினார். கடந்த லோக்சபா தேர்தலில் சிவசேனா கட்சியுடன் இணைந்து போட்டியிட்ட பா.ஜ.க, தற்போது இரு கட்சிகளிடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடாக காரணமாக தனித்து போட்டியிடும் முடிவுக்கு பா.ஜ.க, வந்துள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Response