பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுவிப்பதில் அரசு உறுதியாக உள்ளது – அமைச்சர் கடம்பூர் ராஜூ..!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை, திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் செவ்வாய்கிழமை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுவிப்பதில் தனக்கு எந்த ஆட்சேபமும் இல்லை என்று ரஞ்சித்திடம் கூறியதாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில், அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, பேரறிவாளன் குறித்து ராகுல் காந்தி கூறியதை குறிப்பிட்டு செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதிலளிக்கும் வகையில் அவர் கூறுகையில்,

பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுவிப்பதில் ராகுல் காந்திக்கு ஆட்சேபம் இல்லை என்று கூறியது அவரது குடும்ப முடிவு. ராகுல் காந்தியின் கூறியதை மத்திய அரசு ஏற்றால் அவர்களை விடுவிக்கலாம். பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுவிப்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. இந்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்கும்” என்றார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உட்பட 7 பேர் 27 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத் தண்டனை பெற்று வருகின்றனர்.

Leave a Response