வரும் தேர்தலில் இந்தியாவையே இழக்கப்போகிறது பாஜக : வைகோ..!

நேற்று பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தமிழகம் வருகை தந்து, பாஜக தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும் என்றும், தமிழகத்தை கைப்பற்றுவோம் என்றும் தொண்டர்களிடையே ஆவேசமாக பேசினார்.

இதுகுறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியபோது, ‘தமிழகத்தை கைப்பற்றுவோம் என்று அமித் ஷா சொல்கிறார், ஆனால் வரும் தேர்தலில் இந்தியாவையே இழக்கப்போகிறது பாஜக என்று கூறியுள்ளார்.

மேலும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும் எண்ணம் தமிழக அரசுக்கு இல்லை என்றும் நிரந்தரமாக மூட தமிழக அரசு உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் வைகோ மேலும் கூறியுள்ளார்.

Leave a Response