கர்நாடகாவில் ரூ.34000 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி: முதல்வர் குமாரசாமி..!

ர்நாடக முதல்வர் குமாரசாமி நிதிநிலை அறிக்கையில் ரூ.34000 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவித்துள்ளார்.

கர்நாடக சட்டசபையில் முதல்வர் குமாரசாமி இன்று தனது முதல் நிதிநிலை அறிக்கையை அளித்து வருகிறார். அவரது நிதிநிலை அறிக்கையில் விவசாயிகளுக்கான பயிர்க்கடன் தள்ளுபடி குறித்து அறிவிக்கப்படும் என அனைவரும் எதிர்பார்த்தபடி இருந்தனர்.

ஏற்கனவே விவசாயிகள் கடன் தள்ளுபடி குறித்து காங்கிரஸ் – மஜத ஒருங்கிணைப்புக் குழு இது குறித்து பேசி முடிவு எடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் நிதிநிலை அறிக்கையில் ரூ.2 லட்சம் வரையிலான பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்வதாக குமாரசாமி அறிவித்துள்ளார். மேலும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள கடன்களின் மதிப்பு ரூ.34000 கோடி என தெரிவித்துள்ளார்.

Leave a Response