8 வழி சாலைக்கு நிலம் எடுக்க எதிர்ப்பு- போலீசாருடன் விவசாயிகள் கடும் வாக்குவாதம்..!

ஊத்தங்கரை அருகே பள்ளத்தூரில் சேலம் – சென்னை 8 வழிச்சாலைக்கு நிலம் எடுப்பதற்கு காவல்துறையினர் ஈடுபடுத்தப்படுவதைக் கண்டித்து விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சேலம் – சென்னை 8 வழி பசுமைச்சாலை திட்டத்திற்காக சேலம், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் நிலம் அளவிட்டு கையகப்படுத்தப்படும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் தொடர்ந்து போராடி வரும் நிலையிலும், நிலம் அளவிடும் பணி தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், இன்று ஊத்தங்கரை அருகே பள்ளத்தூரில் நிலம் எடுக்க எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், நிலம் எடுக்க வருவாய்த்துறையினர், தாசில்தார் வராமல் காவல்துறையினர் ஈடுபடுத்தப்படுகின்றனர். அவர்களை வைத்து மக்களை மிரட்ட அரசு நினைக்கிறது.

8 ஆயிரம் ஏக்கரில் விவசாயம், மலைகள், ஆறுகள், கிணறுகளை அழித்துவிட்டு பசுமை வழிச்சாலை போடுவதன் மூலம் யாருக்கு ஆதாயம் ? எங்களின் வாழ்வாதாரம் பறி போக நாங்கள் என்றைக்கும் விடமாட்டோம் என்று போலீஸாரை மறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Response