சேலம்-சென்னை 8 வழி சாலை:விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் கருத்து கேட்டு வருகிறார் அன்புமணி ராமதாஸ்..!

சேலம் – சென்னை இடையேயான எட்டு வழிச்சாலை தொடர்பாக உத்திரமேரூரில் அன்புமணி ராமதாஸ் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடம் கருத்து கேட்டு வருகிறார்.

காஞ்சிபுரம்: சேலம் – சென்னை இடையேயான எட்டு வழிச்சாலை தொடர்பாக உத்திரமேரூரில் அன்புமணி ராமதாஸ் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடம் கருத்து கேட்டு வருகிறார்.

சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்கள் வழியாக சென்னையை வந்தடையும் இந்த பசுமை வழி சாலையானது 8 வழி விரைவு சாலையாக அமைக்கப்பட உள்ளது.

இதற்காக 8,000 ஏக்கர் விவசாய நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதனை எதிர்த்து அப்பகுதி மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கியுள்ள நிலையில் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சேலம் – சென்னை இடையேயான 8 வழி சாலை தொடர்பாக மக்களிடம் பாமக நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் காஞ்சிபுரம் மாவட்ட மக்களிடம் கருத்து கேட்டு வருகிறார்.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் கருத்து கேட்டு வருகிறார்.

Leave a Response