18 எம்எல்ஏக்களும் பதவி இழக்க வேண்டும் என்பதே தினகரன் விருப்பம்.. திவாகரன் குற்றச்சாட்டு..!

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு தீர்ப்பால் தினகரனுக்கு சம்மட்டி அடி கிடைத்துள்ளது என்று அவரது உறவினரும் அண்ணா திராவிடர் கழகம் கட்சியின் பொதுச்செயலாளர் திவாகரன் விமர்சனம் செய்துள்ளார்.

இதுகுறித்து மன்னார்குடியில், திவாகரன் இன்று அளித்த பேட்டியில், 18 எம்எல்ஏக்கள் பதவியும் பறிபோக வேண்டும் என்பதே தினகரன் எண்ணம். அந்த முயற்சி பலிக்காமல் போய் விட்டது. எனவே இந்த தீர்ப்பு தினகரனுக்கு கிடைத்த சம்மட்டி அடியாகவே நான் கருதுகிறேன். தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களின் பதவி சம்மந்தமாக சென்னை ஹைகோர்ட்டில் மாறுபட்ட தீர்ப்பு வந்துள்ளது. இனி 3வது நீதிபதியின் தீர்ப்புக்கு பிறகு இந்த வழக்கு ஒரு முடிவுக்கு வரும். இவ்வாறு திவாகரன் தெரிவித்தார்.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட, 18 எம்எல்ஏக்களில் சிலரை தனது பக்கம் இழுக்க திவாகரன் முயன்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், திவாகரன் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Response