18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: அமைச்சர்களுடன் முதல்வர் பழனிச்சாமி அவசர ஆலோசனை..!

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று தீர்ப்பு வர இருப்பதையொட்டி, தனது ஆதரவு எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்களுடன் தமிழக முதல்வர் பழனிச்சாமி அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.

தமிழக அரசியலில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்த போகும் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. தினகரன் ஆதரவு அதிமுக எம்.எல்.ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் இன்று பகல் 1 மணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.

தற்போது, தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 18 ஆகும். தற்போது தகுதி நீக்கத்துக்குப் பின்னர் தமிழக சட்டசபையில் அதிமுகவின் பலம் 110ஆக உள்ளது. தமிழக சட்டசபையின் தற்போதைய எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 216 ஆக உள்ளது.

திமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 98. தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரும் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில்தான் இப்போது தீர்ப்பு வருகிறது. இந்த தீர்ப்பு எதிராக வந்தால், அரசு நம்பிக்கையில்லா தீர்மானத்தை சந்திக்க வேண்டிவரும். இதனால் தமிழக அரசு கவிழும் நிலை கூட ஏற்படும்.

இதனால் தற்போது தனது ஆதரவு எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்களுடன் தமிழக முதல்வர் பழனிச்சாமி அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். ஆலோசனை கூட்டத்தில் மூத்த அமைச்சர்களுடன் முதல்வர் பேசி வருகிறார். கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தி வருகிறார். இன்னும் சில நிமிடத்தில் இன்னும் சில எம்எல்ஏக்கள் அங்கு வர உள்ளனர்.

Leave a Response