சிண்டிகேட் வங்கி மோசடி-ஏ.சி.முத்தையா மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்..!

சிண்டிகேட் வங்கியில் கடன் வாங்கியதில் வங்கிக்கு ரூ103 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் தொழிலதிபர் ஏ.சி.முத்தையா மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இவர் பர்ஸ்ட் லீசிங் நிறுவனத்தின் முன்னாள் தலைவராகும்.

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு பர்ஸ்ட் லீசிங் நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனம் சிண்டிகேட் வங்கியில் கணக்குகளை பராமரித்து வந்தது. இந்நிலையில், கம்ப்யூட்டர் டெக்னாலஜியைப் பயன்படுத்தி நிறுவனத்தின் வருவாயை அதிகாக போலியாக காட்டி வங்கியிலிருந்து கோடிக்கணக்கில் பர்ஸ்ட் லீசிங் நிறுவனம் கடன் பெற்று வந்ததாக கூறப்படுகிறது.

இந்த கடன் தொகை, நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பிற கம்பெனிகளுக்கும் மாற்றி விடப்பட்டது. அதே நேரத்தில் கடனை செலுத்தாமல் இருப்பதற்காக இந்த நிறுவனம் பல்வேறு முறைகேடுகளை செய்ததால் வங்கிக்கு ரூ102.87 கோடி இழப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியானது.

இதையடுத்து, நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஏ.சி.முத்தையா, நிர்வாக இயக்குநர் பாருக் இரானி மற்றும் 23 பேர் மீது சிபிஐ கடந்த 2016 ஜூன் 8ம் தேதி வழக்கு பதிவு செய்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் ஏ.சி.முத்தையா, பாருக் இரானி மற்றும் 23 பேர் மீது சிபிஐ நேற்று எழும்பூர் கூடுதல் தலைமைப் பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நேற்று குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.

Leave a Response