கர்நாடகாவில் 130 திரையரங்குகளில் காலா இன்று ரிலீஸ் : போலீஸ் பாதுகாப்பு வழங்க குமாரசாமி உத்தரவு..!

நடிகர் ரஜினிகாந்த் நடித்த காலா திரைப்படம் கர்நாடகாவில் இன்று 130 தியேட்டர்களில் வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, தியேட்டர்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்க முதலமைச்சர் குமாரசாமி உத்தவிட்டுள்ளார்.

காவிரி பிரச்சனையில் கர்நாடகாவுக்கு எதிராக பேசியதாக கூறி நடிகர் ரஜினிகாந்த் நடித்த காலா திரைப்படத்தை திரையிட தடை விதிக்கப்பட்டது. ஆனால் கர்நாடக உயர்நீதிமன்றம் படத்தை திரையிட அனுமதி அளித்தது. பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் மாநில அரசுக்கு உத்தரவிட்டது.

இந்நிலையில் கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் நேற்று நடைபெற்றது. நடிகை ஜெயமாலா உள்பட 25 பேர் புதிய அமைச்சர்களாக பதவி ஏற்றனர். புதிய அமைச்சர்கள் பதவி ஏற்புக்கு பின், அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் குமாரசாமி தலைமையில் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு பின் குமாரசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் ‘காலா’ படத்திற்கு கர்நாடகத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதனால் அந்த படத்தை இங்கு வெளியிடாமல் இருந்தால் நல்லது என்று விநியோகஸ்தர்களுக்கு நான் கூறினேன். இப்போதும் அதைத்தான் கூறுகிறேன்.

ஆயினும் கர்நாடக உயர்நீதிமன்ற பிறப்பித்துள்ள உத்தரவை அமல்படுத்துவோம். ‘காலா’ படம் திரையிடப்படும் திரையரங்குகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என தெரிவித்தார்.

Leave a Response