தூத்துக்குடி படுகொலை:சென்னையில் திமுகவின் போராட்டம்-ஸ்தம்பித்த ராஜாஜி சாலை..!

தூத்துக்குடி படுகொலைக்கு எதிராக சென்னையில் நடந்த திமுகவின் போராட்டம் காரணமாக மொத்தமாக ராஜாஜி சாலை ஸ்தம்பித்துள்ளது.

மக்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூட கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க அமைதிப் பேரணியை நடத்திய பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது.

போலீசின் இந்த கண்மூடி தனமாக தாக்குதல் காரணமாக இதுவரை 14 பேர் பலியாகி உள்ளனர். ஆனாலும் இதைவிட அதிக பேர் பலியாகி இருக்கலாம் என்று அச்சமூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

நடத்திய துப்பாக்கி சூட்டில் இதுவரை அதிகாரப்பூர்வமாக 13 பேர் மரணம் அடைந்துள்ளனர். 25க்கும் அதிகமானோர் என்ன ஆனார்கள், எங்கே இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. இதில் 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இதில் சிலர் மிகவும் மோசமான நிலையில் கவலைக்கிடமாக உள்ளனர்.

தூத்துக்குடி படுகொலையை தொடர்ந்து சட்டசபையின் அலுவல் ஆய்வு கூட்டத்தை திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் புறக்கணித்துள்ளது. அவர் அவையில் இருந்த வெளியே வந்த பின் சட்டசபையில் உள்ள முதல்வர் அறைக்கு வெளியே போராட்டம் செய்தனர். இதையடுத்து போலீஸ் அவர்களை குண்டுக்கட்டாக தூக்கி சென்று கைது செய்தது.

இவர்களின் போராட்டம் காரணமாக சென்னையில் பல மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பொதுமக்கள் கடும் பாதிப்பிற்கு உள்ளாகினர். அந்த பகுதியில் பல மணி நேரமாக வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை.

திமுகவினர் போராட்டத்தால் ராஜாஜி சாலையில் யாரையும் போலீஸார் அனுமதிக்கவில்லை. இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவி வந்தது. ராஜாஜி சாலையில் போலீஸ் வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டது. இதனால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.

Leave a Response