முதல்வருக்கான தகுதி இல்லாதவர் எடப்பாடி பழனிச்சாமி – ஸ்டாலின் விளாசல்..!

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் 100 நாட்களாக போராடி வருகின்றனர். போராட்டத்தின் 100 வது நாளான போராட்டத்தில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் 12 பேர் உயிரழந்துள்ளனர். இதனால் தூத்துக்குடி நகரமே பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

தூத்துக்குடிக்கு செல்லும் ரயில்கள் யாவும் நிறுத்தப்பட்டன. தூத்துகுடியிலிருந்து வெளியே அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை. தூத்துத்குடி நகரத்திற்கு 144 தடைஉத்தரவு போடப்பட்டுள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்ட மக்களை பல்வேறு தலைவர்கள் நேரில் பார்த்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். வைகோ, கமலஹாசன் ஆகியோர் பார்வையிட்டனர்.

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் காயமடைந்தவர்களை நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறினார் ஸ்டாலின். பின் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின் நியாயமாக முதல்வர் நேரில் வந்து ஆறுதல் கூறவேண்டும் என்றும் நிரந்தரமாக ஸ்டெர்லைட் ஆலையை மூடவேண்டும் என அறிவித்தால்தான் அமைதி திரும்பும் என்றும் கூறினார். முதல்வர் பதவியில் இருக்கும் தகுதி இல்லாதவர் எடப்பாடி பழனிச்சாமி. தூத்துக்குடி எஸ்.பி மற்றும் ஆணையரை உடனடியாக மாற்ற வேண்டும்.என கேட்டு கொண்டார்.

Leave a Response