ஸ்டெர்லைட் விரிவாக்கத்துக்கு தடை – உயர் நீதிமன்றம் உத்தரவு..!

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் 100 நாட்களாக போராடி வருகின்றனர். போராட்டத்தின் 100 வது நாளான போராட்டத்தில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் 12 பேர் உயிரழந்துள்ளனர். இதனால் தூத்துகுடி நகரமே பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது. தூத்துக்குடிக்கு செல்லும் ரயில்கள் யாவும் நிறுத்தப்பட்டன. தூத்துகுடியிலிருந்து வெளியே அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை. தூத்துத்குடி நகரத்திற்கு 144 தடைஉத்தரவு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு தடைகோரி வழக்கை பேராசிரியர் பாத்திமா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். அதற்கு இன்று தீர்ப்பு அளிக்கப்படுகிறது. உயர்நீதிமன்ற மதுரை கிளை இதற்கான தீர்ப்பை வழங்கவுள்ளது.. நீதிபதிகள் சுந்தர், அனிதா சுமந்த் அமர்வு தீர்ப்பளிக்கிறது.

இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. போலியான ஆவணங்களை காட்டி சுற்றுப்புறச் சூழல் எனப் பல அதிகாரிகளையும் சரிக்கட்டியே அனுமதி வாங்கியுள்ளது என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்த்து. ஸ்டெர்லைட் விரிவாக்கம் குறித்து நான்கு மாத்த்திற்குள் மக்களிடம் கருத்து கேட்க வேண்டும். ஸ்டெர்லைட் விரிவாக்கத்திற்கு இடைக்காலத் தடை மட்டுமே நீதிமன்றம் விதித்துள்ளது.

Leave a Response