காவிரி விவகாரம்: திமுக சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம்..!

காவிரி வழக்கு விவகாரம் தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விவாதிப்பதற்காக சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சிக் கூட்டம் தொடங்கியுள்ளது.

காவிரி நதி நீர் பங்கீட்டு வழக்கில், காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்படும் என்று மத்திய அரசு தாக்கல் செய்த வரைவு அறிக்கையை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.

இந்த விவகாரத்தில் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு இருக்கவேண்டிய அதிகாரங்கள் குறித்து விவாதிப்பதற்காக சென்னை அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

காலை 10.30 மணியளவில் தொடங்கிய இந்தக் கூட்டத்திற்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் காதர் மொகிதீன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

Leave a Response