திருத்தணி அருகே அகத்தீஸ்வரர் கோவில் ஐம்பொன் சிலைகள் திருட்டு !

திருத்தணி அருகே அகத்தீஸ்வரர் கோவிலில் ஐம்பொன் சிலைகள் திருடப்பட்ட சம்பவம் குறித்து  போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகினறனர்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியையடுத்து போதட்டுர்பேட்டையில்  அகத்தீஸ்வரர் ஆலையம் இருக்கிறது. நேற்று இரவு பூஜை முடிந்ததும் கோவில் நடையை பூட்டிவிட்டு அர்ச்சகர் சென்றுள்ளார். இன்று காலையில் கோவிலுக்குள் வந்த பக்தர்கள் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர்  காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து விரைந்து வந்த போலீஸார் உள்ளே சென்று பார்த்த போது 2அடி உயரம் உள்ள சிவன் சிலை மற்றும் 1 1/4 அடி உயரம் உள்ள பார்வதி சிலைகள் திருடு போனது தெரியவந்தது. கோவிலில் உள்ள நடராஜர் சிலை, மற்றும் சிவகாமி சிலை ஆகியவை வேறு அறையில் இருந்ததால் அவை தப்பியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *