ரஜினியும் கமலும் என் நண்பர்கள் அல்ல:விஜயகாந்த் தான் எனக்கு நெருங்கிய நண்பர்-“சரத்குமார்”

ரஜினியும் கமலும் என் நண்பர்கள் அல்ல என்றும் கேப்டன் விஜயகாந்த் தான் தமக்கு நெருங்கிய நண்பர் என்றும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

நடிகரும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார், தன் கட்சியின் துணைப் பொதுச்செயலாளரின் இல்லத் திருமண விழாவில் பங்கேற்றார். விழாவில் பங்கேற்றுவிட்டு செய்தியாளர்களை சந்தித்து பேசிய சரத்குமாரிடம் ரஜினி, கமல் உடனான நட்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த சரத்குமார் ரஜினியும் கமலும் தனக்கு நண்பர்கள் இல்லை எனவும் கலைத்துறையில் தன்னுடன் பயணிப்பவர்கள் மட்டுமே எனவும் தெரிவித்தார்.

எனக்கு நண்பர் என்றால் விஜயகாந்த் தான். நான் கஷ்டப்படும் காலங்களில் எனக்கு உறுதுணையாய் இருந்து உதவிய கேப்டன் விஜயகாந்தை எக்காலத்திலும் மறக்கமாட்டேன் என்றார். இனி வரும் காலங்களில் விஜயகாந்துடன் சேர்ந்து பயணிக்க வாய்ப்பு கிடைத்தால் இணைந்து செயல் படுவோம் என தெரிவித்தார்.

Leave a Response