தமிழர் வீரப் பெண்ணாக சன்னி லியோனின் “வீரமாதேவி” !

பிரபல நீலப்பட நடிகை சன்னி லியோன் தமிழில் நடிக்கும் “வீரமாதேவி” படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியாகிறது.

இந்தப் படத்தை “தம்பி வெட்டோத்தி சுந்தரம்”, “சவுகார்பேட்டை”, “பொட்டு” படங்களை இயக்கிய வி.சி.வடிவுடையான் இயக்குகிறார். பொன் ஸ்டீபன் தயாரிக்கிறார்.

படம் பற்றி வி.சி.வடிவுடையான் கூறியதாவது:-

தமிழில் உருவாகும் பிரமாண்ட சரித்திரப் படம் இது. தமிழ் தவிர்த்து தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் தயாராகிறது. ஆங்கிலத்தில் டப் ஆகிறது. தமிழ்நாட்டு வரலாற்றில் மறைக்கப்பட்ட ஒரு வீரப் பெண்ணின் கதை. அந்த வீரப் பெண்ணாக சன்னி லியோன் நடிக்கிறார். அவர் நடிப்பது பற்றி வரும் விமர்சனங்கள் குறித்து நாங்கள் கவலைப்படவில்லை. அவரை ஒரு நடிகையாகவும், வீரமாதேவி கேரக்டருக்கு பொருத்தமானவராகவும் மட்டுமே பார்க்கிறோம்.

இதில் நடிப்பதற்காக அவர் வாள் சண்டை, குதிரையேற்றம் போன்றவற்றை முறைப்படி கற்றுக் கொண்டார். இப்போது தமிழ் பேசவும் கற்றுக் கொண்டிருக்கிறார். ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடந்த முதல்கட்ட படப்பிடிப்பில் அர்ப்பணிப்பு உணர்வோடு நடித்துக் கொடுத்தார். நூறு அடி உயரத்திற்கு அவரை ரோப் கட்டி தூக்கி நடிக்க வைத்தோம்.

துணிச்சலுடன் நடித்தார். தற்போது கேராளாவில் உள்ள அடர்ந்த காடுகளில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. தினமும் படப்பிடிப்பில் நூற்றுக் கணக்கில் யானைகள், குதிரைகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தப் படம் 100 கோடி செலவில் தயாராகிறது.

இதில் 40 கோடி கிராபிக்ஸ் பணிகளுக்காக மட்டும் செலவிடப்படுகிறது. என்றார் வி.சி.வடிவுடையான்.

Leave a Response