வெண்கல சிலை சூர்யா, கற்சிலை சியான் -இயக்குனர் ஹரி !

இயக்குனர்  ஹரி இயக்கத்தில் 2003-ம் ஆண்டு விக்ரம், த்ரிஷா நடிப்பில் வெளியாகி செம ஹிட்டான படம் ‘சாமி’. இப் படத்தின் இரண்டாம் பாகம், ‘சாமி ஸ்கொயர்’ என்ற பெயரில் தயாராகி வருகிறது.  இதில் கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடிக்க, பாபி சிம்ஹா வில்லனாக நடித்துள்ளார்.

இப்படத்தின் ஷூட்டிங் காரைக்குடி மற்றும் திருநெல்வேலி பகுதிகளில் நடைபெற்றது. தற்போது 75 சதவிகிதத்திற்கும்  மேல் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த மோஷன் போஸ்டரில் விக்ரம் கற்சிலையைப் போல திருநெல்வேலி  மைல்கல்லில் அமர்ந்திருக்கிறார். கொஞ்சம் கொஞ்சமாக கற்கள் உடைந்து விக்ரம் உயிர்பெறுவதாக இந்த மோஷன் போஸ்டர் டிசைன் செய்யப்பட்டுள்ளது.

பரபர திரைக்கதைக்குப் பெயர்போன இயக்குநர் ஹரி தொடர்ந்து போலீஸ் ஸ்டோரிகளாக எடுத்து வருகிறார். சூர்யாவை வைத்து ‘சிங்கம்’ படத்தின் மூன்று பாகங்களை எடுத்த ஹரி, ‘சாமி ஸ்கொயர்’ படத்தில் ‘சாமி’ படத்தின் துடிப்பான போலீஸாக விக்ரமை காட்டுகிறார்.

சூர்யா, அனுஷ்கா ஆகியோர் நடித்த ‘சிங்கம்’ படத்தின் மூன்றாம் பாகமான ‘சி 3’ படத்தின் மோஷன் போஸ்டரில் சூர்யாவை வெண்கல சிலையைப் போல காட்டியிருந்தார் ஹரி. இப்போது விக்ரமை கற் சிலைபோல ஆக்கியிருக்கிறார்.

Leave a Response