சல்மான் கானின் ‘ரேஸ்- 3’ பட டிரெய்லர்…

பாலிவுட்டில் சல்மான் கான் நடிப்பில் வெளிவரவுள்ள படம் “ரேஸ்-3”.  அதிரடி, த்ரில்லர் கதையமைப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை பிரபல நடன இயக்குநர் ரெமோ டிஸோசா இயக்கியுள்ளார்.

ரேஸ் பட வரிசையில் பாலிவுட்டில் இரண்டு படங்கள் வெளிவந்துள்ளன. ஆனால் அதில் முதல் பாகம் மட்டும் தான் மாபெரும் வெற்றிப்பெற்றது. 2013ல் ஜான் அப்ரஹிம் மற்றும் தீபிகா படுகோன் நடிப்பில் வெளியான “ரேஸ் 2” படுதோல்வியை சந்தித்தது.

ரேஸ் பட வரிசையில் வெளியான எந்த பாகங்களுக்கும் தொடர்பில்லை. ஏமாற்றப்படுபவதும், ஏமாறுவதும் தான் பின்னணி என்பதால், ரேஸ் மற்றும் ரேஸ்2 படங்களுக்கு தொடர்பு தேவையில்லை. மேலும் ரேஸ்-3 திரைக்கதையும் இதையே பின்பற்றி தயாரிக்கப்பட்டுள்ளது.

பிரதான நாயகனாக சல்மான் கான் இருக்க, ஜாக்குலின் ஃபெர்னான்டஸ், பாபி தியோல், சகுப் சலீம் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரேஸ்-1 மற்றும் ரேஸ்-2 படங்களில் திருப்புமுனை கதாபாத்திரத்தில் நடித்திருந்த அனில் கபூர்  இந்த ரேஸ்-3 படத்தில் இடம்பெற்றுள்ளார்.

Leave a Response