ஊட்டியில் முதன்முறையாக வைக்கப்பட்டிருக்கும் செலோசிய மலர் செடிகள் !

ஆண்டு தோறும் ஊட்டியில் நடக்கும் மலர் கண்காட்சியின் போது, பல லட்சம் மலர் செடிகள் பூங்காவில் நடவு செய்யப்படும். இதில், பல வகையான மலர் செடிகள், கீரை வகைகள் மற்றும் மூலிகை வகை செடிகள் கூட நடவு செய்யப்படுகிறது. மேலும், பல வகையான மலர் செடிகள் தொட்டிகளில் வைத்து அலங்காரம் செய்யப்படுகிறது. இம்முறை 35 ஆயிரம் தொட்டிகளில் செடிகள் வைக்கப்பட்டுள்ளது. இதில், பல்வேறு மலர் செடிகள், கீரை வகைகள் மற்றும் பூக்கா தாவரங்கள் உட்பட பல்வேறு செடிகள் வைக்கப்பட்டள்ளன. இவைகள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.

அதுமட்டுமல்லாது இந்த முறை முதன் முறையாக பெங்களூர் பகுதியில் இருந்து செலோசியா எனப்படும் கீரை வகையை சேர்ந்த செடிகளின் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளது.
இந்த செடியில் பூத்துள்ள மலர்கள் கூம்பு வடிவில் காணப்படுகிறது. முதன் முறையாக வைக்கப்பட்டுள்ள இந்த மலர் செடியில் இளஞ்சிவப்பு நிறத்தில் பூத்துள்ள
இந்த செலோசிய மலர்கள் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது.

உள்ளூர் மக்களும் புதிதாக பார்ப்பதால், இதனை கண்டு ரசித்து செல்வது மட்டுமின்றி புகைப்படங்களையும் எடுத்துச் செல்கின்றனர்.

Leave a Response