எஸ்.வி. சேகர் வீடு தாக்கப்பட்ட வழக்கு : வழக்கறிஞரை சரமாரியாக சாட்டிய உயர்நீதிமன்றம் !

எஸ்.வி. சேகர் வீடு தாக்கப்பட்டது குறித்து பொது நலன் வழக்குத் தொடரப்பட்டதற்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் சரமாரிக் கேள்வியை எழுப்பியுள்ளனர்.

எஸ்.வி. சேகர் வீட்டின் மீது கல் எறிந்தது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொது நலன் வழக்கு மனு இன்று விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதிகள், எஸ்.வி. சேகர் வீடு மீது கல் எறிந்தது தொடர்பாக நீங்கள் ஏன் வழக்கு தொடர்ந்தீர்கள். நீதிமன்றத்தை நாட முடியாதவர்களுக்காகத்தான் பொது நலன் வழக்கு தொடர முடியும். எஸ்.வி. சேகர் என்ன நீதிமன்றத்தை நாட முடியாதவரா? என்று கேள்வி எழுப்பினர்.

மேலும், 3வது நபர் எதன் அடிப்படையில் பொது நலன் வழக்குத் தொடர முடியும் என்பது வழக்குரைஞராக இருக்கும் நீங்கள் அறிந்திருக்கவில்லையா என்று பொது நலன் மனு தாக்கல் செய்த வழக்குரைஞர் பிரேம் ஆனந்திடம் உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

Leave a Response