புதுக்கோட்டையில் ஜல்லிக்கட்டு : காளைகள் சீறிப்பாய்ந்ததில் 7 பேர் காயம் !

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே சித்தன்னவாசலில் உள்ள அய்யனார் கோவில்  திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நேற்று நடைபெற்றது.

போட்டியை சுகாதாரதுறை அமைச்சர் விஜயபாஸ்கர், கலெக்டர் கணேஷ் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.  புதுக்கோட்டை, திண்டுக்கல், மதுரை, திருச்சி, சிவகங்கை, கரூர், உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 609 காளைகள் அழைத்து வரப்பட்டது.  155 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர்.

சீறிப்பாய்ந்த காளைகளை மாடு பிடி வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். இதில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத மாடுகளின் உரிமையாளர்களுக்கும் பல்வேறு வகையான பரிசுகள் வழங்கப்பட்டது.

ஜல்லிக்கட்டில் மாடுகள் முட்டியதில் பழனிச்சாமி, நாகராஜ்  உள்பட 7 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு  ஜல்லிக்கட்டு நடைபெற்ற இடத்தின் அருகே தயார் நிலையில் இருந்த மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். இவர்களில் 4 பேர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Leave a Response