பல்கலைக் கழக பெண் ஊழியரிடம் நகையை பறிப்பு; தளபதி விஜய் பாணியில் திருடனை பிடித்த போலீஸ் !

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள , ஆர்.எம். காலனியைச் சேர்ந்த விஜயகுமார். இவரின் மனைவி கவிதா (36). இவர் திண்டுக்கல் ரௌண்டு ரோட்டில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழக தொலைதூர கல்வி மையத்தில் ஊழியராக வேலைபார்த்து வருகிறார்.

நேற்று மாலை கவிதா தனது மொபட்டில் ஆர்.எம்.காலனி 9-வது கிராஸ் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது, பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ஒருவர் கவிதா கழுத்தில் அணிந்திருந்த 5½ சவரன் நகையை பறித்துக்கொண்டு தப்பி சென்றுவிட்டார்.

இது தொடர்பாக, கவிதா திண்டுக்கல் நகர் மேற்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் காவலாளர்கள் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள ரவுண்டானாவில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர்.

அதில் மோட்டார் சைக்கிளில் வந்த நபர் முகத்தை கைக்குட்டையால் மறைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து நகர் முழுவதும் காவலாளர்கள் தீவிரப்படுத்தப்பட்டனர். அவருடைய மோட்டார் சைக்கிள் அடையாளங்களை வைத்து அவர் திண்டுக்கல் இரயில் நிலையம் அருகே உள்ள ஒரு விடுதியில் தங்கியிருப்பதை காவலாளர்கள் கண்டுபிடித்தனர்.

இதனையடுத்து அங்கு விரைந்து சென்ற காவலாளர்கள் அந்த மர்மநபரை மடக்கி பிடித்தனர். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் தாடிக்கொம்புவை சேர்ந்த முருகையா மகன் பூவரசன் (20) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த காவலாளர்கள் அவரிடம் இருந்து 5½ சவரன் நகையை மீட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *