இன்று சர்வதேச செவிலியர் தினம் கடைபிடிப்பு !

 உலகம் முழுவதும் செவிலியர்களின்  சர்வதேச செவிலியர் தினம்  இன்று கொண்டாடப்படுகிறது.
உலகம் முழுவதும் செவிலியர்கள் ஆற்றி வரும் உன்னதமான பணியினை உலகிற்கு உணர்த்தும் வகையில், சர்வதேச செவிலியர் தினம் ஆண்டுதோறும் மே 12ம் தேதி அனுசரிக்கப்படுகிறது.

1974-ம் ஆண்டு ஜனவரி மாதம் நவீன செவிலியர் முறையை உருவாக்கிய இங்கிலாந்தைச் சேர்ந்த பிளாரன்ஸ் நைட்டிங்கேல் (Florence Nightingale) பிறந்த நாளான மே 12 ஆம் தேதியை, சிறப்பாக நினைவு கூற முடிவு முடிவு செய்யப்பட்டது

அதன்படி அன்றைய தினத்தை சர்வதேச செவிலியர் தினமாக அனுசரிக்க முடிவு செய்யப்பட்டது. இங்கிலாந்தில் ஆண்டுதோறும் மே-12ஆம் தேதி லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்ட்டர் அபேயில் சம்பிரதாயபூர்வமாக இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

இங்குள்ள செவிலியர் மூலம் மாளிகையில் உள்ள விளக்கு ஏற்றப்பட்டு அங்கு வருகைதரும் செவிலியர்கள் ஒவ்வொருவராலும் கைமாறப்பட்டு பின்னர் அது அங்குள்ள உயர்ந்த பீடத்தில் வைக்கப்படும். இது ஒரு செவிலியரில் இருந்து மற்றொருவருக்கு தமது அறிவைப் பரிமாறப்படுவதைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது.

இந்த நிலையில் செவிலியர்களை பாராட்டும் விதமாகவும், நவீன காலத்துக்கேற்ற விதமாகவும் அவர்களின் உடை வடிவமைப்பு மாற்றப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இதனை அறிவித்துள்ளார்.

Leave a Response