போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மின்னணு முறையில் அபராதம் செலுத்த புதிய வசதி!!

டிராபிக் விதிகளை மீறுபவர்களிடம், டிராபிக் போலீசார் லஞ்சம் வசூலிப்பதாகவும், அதேபோல் சாலை விதிகளை மீறுபவர்களும் தங்கள் குற்றங்களிலிருந்து தப்பிக்க லஞ்சம் கொடுப்பதாகவும், அதிக அளவில் புகார்கள் வந்தன.

இந்நிலையில், இதை தடுக்கும் விதமாக, மின்னணு முறையில் அபராதம் செலுத்தும் வசதியை சென்னை மாநகர போலீஸ் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், காவல்துறையினர் எவரும் இனி சாலை விதிகளை மீறுபவர்களிடமிருந்து பணம் பெறவே கூடாது.

அதேபோல், சாலை விதிகளை மீறுபவர்கள் தங்கள் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, பேடிஎம் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தி அபராதத்தை செலுத்தலாம். அபராதத்தை வசூலிக்கும் வகையில், போலீசாருக்கு ஸ்வைப் மெஷின்களும் வழங்கப்பட்டுள்ளன. அபராதம் செலுத்துவோருக்கு, அதற்கான மின்னணு ரசிதும் வழங்கப்படும்.

அவ்வாறு அபராதம் செலுத்த முடியாதவர்கள் தபால் நிலையத்திலோ அல்லது நிதிமன்றத்திலோ சென்று பணமாக அபராதத்தை செலுத்த வேண்டும். இந்த புதிய திட்டமானது, இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

இது தவிர, குடிபோதையில் வண்டி ஓட்டுபவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, உரிய மருத்துவச் சான்று காட்டி நிரூபித்து, அவர்களிடமிருந்து அபராதம் வசூலிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Leave a Response