ஒரு நாள் சர்வதேச போட்டியில் பங்கேற்கும் ஆஸ்திரேலியா அணியில் புதிய கேப்டன் நியமனம் !

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் பந்தை சேதப்படுத்தியதாக எழுந்த புகாரை அடுத்து கேப்டன் ஸ்மித், துணை கேப்டன் வார்னர், மற்றொரு வீரர் பான்கிராப்ட் ஆகியோருக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஸ்மித், வார்னர் ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜிநாமா செய்தனர்.

இதற்கிடையே ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய அணிக்கு புதிய கேப்டனாக டிம் பெயின் நியமிக்கப்பட்டார்.

விக்கெட் கீப்பரான அவர் ஏற்கெனவே டெஸ்ட் அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். புதிய கேப்டன் தலைமையில் ஆஸ்திரேலியா அணி 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்துடன் மோதுகிறது.

“புதிய கேப்டன் தலைமையின் கீழ் முழு நம்பிக்கை உள்ளது. ஆரோன் பின்ச் அவருக்கு துணை கேப்டனாக செயல்படுவார்.

இந்த தொடர் மூலம் இங்கிலாந்தில் உள்ள ஆடுகளங்களின் தன்மையை வீரர்கள் அறிந்து கொள்வர். இதனால் 2019 இங்கிலாந்து உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை ஆஸ்திரேலியா அணி எதிர்கொள்ள உதவும்” என்று ஆஸ்திரேலிய தேர்வாளர் குழுத் தலைவர் டிரெவர் ஹான்ஸ் தெரிவித்துள்ளார்.

Leave a Response