பாலியல் பலாத்காரத்துக்கு காரணம் பெண்களின் உடைதான் என்றால் அது முட்டாள்த்தனம்-நிர்மலா சீதாராமன்..!

குழந்தைகள், சிறுமிகள், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. எங்கு பார்த்தாலும் கொலை, வன்கொடுமை என சம்பவங்கள் நடந்து கொண்டே இருக்கிறது. பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்து பல்வேறு தரப்பினர் கருத்து கூறி வருகின்றனர். வேதனை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாலியல் வன்முறை குறித்து, நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார். அதில், பெண்களுக்கு எதிராக வன்முறை, குற்றங்களை நிறுத்துவதற்கு அரசு ஏதும் செய்ய முடியாது. பெண்களின் உடைதான் இதுபோன்ற வன்முறைகளுக்கு காரணமா என்று பலர்குறிப்பிடுகின்றனர். ஆனால் அது மட்டுமே காரணம் கிடையாது.

பெண்களுக்கு எதிரான கணிசமான எண்ணிக்கையிலான குற்றங்கள் தெருக்களில் நடைபெறுவது இல்லை. அவர்களுடைய வீடுகளில்தான் நடைபெறுகிறது.குடும்ப உறுப்பினர்கள், நண்பர்களால் இதுபோன்ற குற்றங்கள் ஏற்படும்போது, இதுபோன்ற குற்றங்களைத் தடுக்க முயற்சிக்கும்போது காவல் துறையினர் பலசிரமங்களை எதிர்கொள்ள வேண்டி உள்ளது. வயதான பெண்மணிகளும், குழந்தைகளும் பலாத்காரம் செய்யப்படுவது ஏன்? ஏன் என்றும் மத்திய அமைச்சர் நிர்மலாசீதாராமன் கேள்வி எழுப்பினார்.

Leave a Response