காமெடி ஆட்டம்…காமெடி ஆட்டம்! நம்ம சிம்புவோட காமெடி ஆட்டம்!!

காமெடி ஆட்டம்…காமெடி ஆட்டம்! நம்ம சிம்புவோட காமெடி ஆட்டம்!! அப்பிடிங்குற தலைப்பை பார்த்தவுடன், அட நம்ம சிம்பு காமெடி படம் பண்ணபோராறு, வடிவேலுவை மிஞ்சிடுவாறு அப்பிடினு நீங்க தப்பா புரிஞ்சிக்குனா நாங்க பொறுப்பல்ல. காரணம் அவர் நிஜ வாழ்க்கையில் சமீப காலமாக காமெடி பண்ணுறாரு.

இன்று சிம்பு என்ன காமெடி பண்ணாறு அப்பிடினு யோசிக்கிறீங்கனு புரியுது. சமீபத்தில் காவேரி மேலாண்மை அமைக்கவேண்டும் என்று பாரதிராஜா, சீமான், அமீர், வெற்றிமாறன், மன்சூர் அலி கான் போன்ற சினிமா பிரபலங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பல்லாவரத்தில் நடந்த இந்த ஆர்பாட்டத்தில் காவல்துறையினர் இந்த சினிமா கலைஞர்களுடன் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பலரை கைது செய்தனர். அந்த கைது செய்யப்பட்டவர்களில் மன்சூர் அலி கான் மட்டுமே ஒரேஒரு சினிமா பிரபலம். அந்த கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட வேண்டும், இல்லையென்றால் தன்னையும் கைது செய்யட்டும் என்று குரல் எழுப்பினார். இதுவே அவருடைய கைதுக்கு காரணம்.

கைது செய்யப்பட்ட நடிகர் மன்சூர் அலி கான் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையும் மன்சூர் அலி கான் சிறையிலிருந்து வெளிவர வேண்டும் என்றால், அவர் ஜாமினில் தான் வெளிவர முடியும். அவரை வெளியே ஜாமினில் அனுப்புவதர்க்கோ, அவர் குற்றமற்றவர் என்று சொல்லி வெளியே அனுப்புவதர்க்கோ நீதி மன்றம் தான் உத்தரவிட முடியும். சரி இதுல நம்ம சிம்பு என்ன காமெடி பண்ணாறு அப்பிடினு நக்கல் அடிக்குறீங்க அப்பிடினு தெரியுது. காமெடி என்னனு தெரிஞ்சிக்க கீழே படியுங்கள்.

முன் பத்தியில் குறிப்பிட்டபடி, கைது செய்யப்பட்ட ஒருவரை நீதிபதி தான் ஜாமினில் வெளியே விட முடியும். இங்கு காவல் துறை அதிகாரிகள் யாருக்கும் கைது செய்யப்பட்டவரை வெளியில் அனுப்ப அதிகாரம் இல்லை. நம்ம சிம்பு என்ன பன்னாருணா, இன்று மாலை ஒரு செல்பி வீடியோ வெளியிட்டார். அதில் தான் நாளை காலை அதாவது 21 ஏப்ரல் 2018 அன்று காலை 9:00 மணி அளவில் தான் சென்னை மாநகர காவல்துறை ஆணையாளரை சந்தித்து, மன்சூர் அலி கான்’னை சிறையிலிருந்து வெளியில் அனுப்பும்படி தான் கேட்க இருப்பதாக அந்த காணொளியில் குறிப்பிட்டுள்ளார்.

சென்னை மாநகர காவல்துறை ஆணையரை பொது மக்கள் காலை 11:00 மணி முதல் நண்பகல் 12:30 மணி வரை தான் சந்திக்க முடியும். முக்கிய பிரமுகர்கள் அல்லது சினிமா நட்சத்திரங்கள் யாராவது பார்வையாளர்கள் நேரம் தவிர வேறு நேரங்களில் ஆணையாளரை சந்திக்க விரும்பினால், அவர்கள் காவல்துறை ஆணையாளர் அலுவலகத்தில் முன் அனுமதி பெறவேண்டும்.

காவல்துறை ஆணையாளரா மன்சூர் அலி கான் அவர்களுக்கு ஜாமீன் கொடுக்க போறார்? மன்சூர் அலி கான் மீது சிம்புக்கு உண்மையில் அக்கறை இருந்தால், சிம்பு நீதிமன்றத்தை நாடி தன்னுடைய சொந்த ஜாமினில் மன்சூர் அலி கான்’னை வெளியில் கொண்டுவர வேண்டும். அப்படி செய்தல் கண்டிப்பாக நாங்கள் மட்டுமல்ல, பலர் சிம்புவை பாராட்டுவார்கள். இல்லையென்றால் மக்கள் “காமெடி ஆட்டம்…காமெடி ஆட்டம்! நம்ம சிம்புவோட காமெடி ஆட்டம்!!” என்று நக்கல் பாட்டு பாடுவார்கள்.

இத்தகைய விஷயங்களை எவ்வாறு அணுகவேண்டும் என்று எதுவுமே சிம்புக்கும் தெரியவில்லை, அவரை வழிநடத்தி செல்லும் அவருடைய ஆலோசகர்களுக்கும் தெரியவில்லை.

இந்த மாதிரி ஏதாவது காமெடியை அப்பப்போ சிம்பு செய்வது தனக்கு தேவையான இலவச விளம்பரத்தை தேடிக்கொள்ள தானோ என சற்று சந்தேகமாக தான் இருக்கிறது.

Leave a Response