தென் மாவட்ட கடலோர பகுதிகளுக்கு எச்சரிக்கை, கடல் சீற்றமாக இருக்கும்..!

21ம் தேதி காலை 8.30 முதல் 22ம் தேதி இரவு வரை கடல் சீற்றமாக இருக்கும் என்று வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் தெரிவித்துள்ளார். 2 மீட்டர் முதல் 3 மீட்டர் வரை கடல் அலைகள் உயரும் என இன்சாட் அமைப்பு தெரிவித்துள்ளது. இதையடுத்து கன்னியாகுமரி, ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்ட கடலோர பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சத்யகோபால் தெரிவித்துள்ளார்.

18 முதல் 22 விநாடிகள் இடைவெளியில் அலைகள் சீற்றத்துடன் காணப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதையடுத்து கடலோர பகுதிகளுக்கு மக்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கடல் சீற்றம் அதிகமாக இருப்பது பற்றி மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் கடலுக்குள் படகுகளில் மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் சத்யகோபால் கூறியுள்ளார்.

Leave a Response