காவிரி மற்றும் காஷ்மீர் சிறுமி விவகாரம்: மத்திய மாநில அரசுகளை கண்டித்து வடகரையில் திமுக கண்டன ஆர்ப்பாட்டம்..

நெல்லை: மத்திய, மாநில அரசுகளை கண்டித்து நெல்லை மாவட்டம் வடகரையில் திமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள வடகரையில் மத்திய. மாநில அரசுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு திமுக மாநில மாணவரணி துணைச் செயலாளர் ஷரீப் தலைமை தாங்கினார்.

பேரூர் அவைத் தலைவர் அமானுல்லா, காங்கிரஸ் மாநில விவசாய அணி இணைச் செயலாளர் ஜாகீர் உசேன் , அ.ம.மு.க செயலாளர் காஜா செய்யது ஒலி, மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை செயலாளர் செய்யது, காங்கிரஸ் நகர தலைவர் அபுபக்கர் சித்திக், முஸ்லீம் லீக் செயலாளர் இலியாஸ், தமுமுக தலைவர் துரை, பேரூர் திமுக துணைச் செயலாளர் ராஜேந்திரன், ஒன்றிய பிரதிநிதி கனியப்பா அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து கட்சிகளையும் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டு மத்திய, மாநில அரசுக்கு எதிராக கண்டன குரலெழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் எஸ்சி / எஸ்டி பழங்குடியினருக்கு எதிரான உச்சநீதிமன்ற தீர்ப்பை மாற்ற கோரியும், காஷ்மீர் சிறுமியை படுகொலை செய்த நபர்களை தூக்கிலிட வேண்டும் என்றும், தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் விதமாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

மேலும் மாணவிகளை பாலியல் தொழில் செய்திட வற்புறுத்திய பேராசிரியை நிர்மலாதேவி மற்றும் அதற்கு துணையாக இருக்கும் அதிகாரிகளுக்கு எதிரான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்த ஆர்ப்பாட்டத்தின்போது வலியுறுத்தப்பட்டது.

Leave a Response