கர்நாடக மாநில சட்டசபை தேர்தலுக்காக பாஜக இரண்டாம்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு..

கர்நாடக மாநில சட்டசபை தேர்தலுக்காக பாஜக இரண்டாம்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது.

கர்நாடக சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் தற்போது சூடுபிடித்து இருக்கிறது. வரும் மே 12ம் தேதி வாக்குப்பதிவும், மே 15ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மொத்தம் 225 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது. இதற்காக கட்சிகள் தீவிரமாக பிரச்சாரம் செய்ய களத்தில் இறங்கியுள்ளது.

இந்த நிலையில் கர்நாடகா தேர்தலுக்காக பாஜக கட்சி முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை கடந்த வாரம் வெளியிட்டது. இந்த முதற்கட்ட பட்டியலில் 72 பேர் இருந்தனர். இதில் பல முக்கியமான வேட்பாளர்களின் பெயர்கள் இடம்பெற்று இருந்தது. இந்த நிலையில் பாஜகவின் இரண்டாவது வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. 82 பேர் கொண்ட 2வது பட்டியல் வெளியிடப்பட்டு இருக்கிறது.

தமிழர்கள் வாழும் பகுதிகளான பங்காரபெட்டில் வேங்கட முனியப்பா, கோலாரில் சங்கடசாலப்பதி, மாலூரில் கிருஷ்ணையா செட்டி, கே ஆர் புறாவில் நந்தியெஷ் ரெட்டி, மஹாலஷ்மி லே அவுட்டில் மஹேந்திர பாபு, பயதானயானபுராவில் ரவி, சிவாஜி நகரில் சுப்ரமணிய நாயுடு, சாந்தி நகரில் வாசுதேவ மூர்த்தி, விஜய் நகரில் ரவீந்திரா, கொலெஹலில் நஞ்சுண்ட சுவாமி, சாமராஜநகரில் மல்லிகார்ஜுனாப்பா, குண்டலுபேட்டில் நிரஞ்சன் குமார் ஆகியோர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

Leave a Response