மீண்டும் விஜயகாந்த் சினிமாவில் நடிப்பார்…

நேற்று நடைபெற்ற கலைத்துறையில் விஜயகாந்த் 40 ஆண்டுகள் பாராட்டு விழாவில் பேசிய டைரக்டர் எஸ்.ஏ.சி, தயாரிப்பாளர் தாணு, செல்வமணி ஆகியோர் விஜயகாந்த் மீண்டும் தங்கள் படங்களுக்கு கால்ஷீட் வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர்.

இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசும்போது, ‘விஜயகாந்த்துக்கு ஒரு வேண்டுகோள். நானும் நீங்களும் அடுத்த வருசம் சேர்ந்து ஒரு படம் பண்றோம். இவர்தான் தயாரிப்பாளர்’ என கலைப்புலி எஸ்.தாணுவைக் குறிப்பிட்டுக் கூறினார்.

பிறகு, விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா இந்த நிகழ்வில் கலந்துகொண்டவர்களுக்கு நன்றி தெரிவித்துப் பேசும்போது, ‘கலைத்துறை சீரழிந்துகொண்டிருப்பதை இங்கு பேசிய எல்லோரும் சுட்டிக்காட்டி இருக்கிறார்கள். கேப்டனை வாழவைத்த கலைத்துறையை அழியவிடமாட்டார். கேப்டன் பழையபடி மீண்டும் நடிக்க வருவார்.’ என உறுதியளித்தார்.

‘கலைத்துறையால் லட்சம் குடும்பங்கள் வாழ்ந்ததாகத்தான் வரலாறு இருக்கும். நிச்சயம் அழிந்ததாக எந்த வரலாறும் உருவாகாது. நடிகர் சங்கத்தின் கடனை அடைக்கப் பாடுபட்டது அனைவருக்கும் தெரியும். நடிகர் சங்கத்தை ஒருங்கிணைத்து வளர்த்தது கேப்டன் தான்.’ எனப் பெருமிதத்தோடு பேசினார் பிரேமலதா விஜயகாந்த்.

Leave a Response