அம்பேத்காரின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய முகப்பேர் இளைஞர்கள்…

சுதந்திர போராட்ட வீரரும், இந்திய அரசின் அரசியல் சாசனத்தை எழுதுயவருமான அண்ணல் அம்பேத்கார் அவர்களின் 127’வது பிறந்தநாள் விழா இன்று இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டது.

இன்று சென்னை முகப்பேரில், இளைஞர்கள் கூட்டாக சேர்ந்து அண்ணல் அம்பேத்கார் அவர்களின் 127’வது பிறந்தநாள் விழாவினை அவருடைய படத்தை திறந்து வைத்து கோலாகலமாக கொண்டாடினர்.

முதலாவதாக முகப்பேரில் உள்ள அம்பேத்கார் விளையாட்டு திடலில் படத்திறப்பு விழா நடந்தது. இந்த விழாவுக்கு இந்திய தேசிய காங்கிரசின் அம்பத்தூர் சர்கில் தலைவர் கே.வி.திலகர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

அம்பேத்கார் அவர்களின் படத்திறப்பு விழாவுக்கு பின்னர் ரத்ததான முகாம் நடைபெற்றது. அதில் இளைஞர்கள் 127 பேர் ரத்ததானம் செய்தனர். சுமார் 150 மாணவர்களுக்கு நோட்டு புத்தகம், பேனா, பென்சில் ஆகியவை கே.வி.திலகரால் வழங்கப்பட்டது.

விழாவினை சிறப்பிக்க வந்தவர்களுக்கு திலகர் லட்டு வழங்கினார்.

Leave a Response