இன்னும் திரைக்கு வராமலே,தேசிய விருது வாங்கிய திரைப்படம்…

இந்த ஆண்டுக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. இதில் சிறந்த தமிழ்ப் படத்துக்கான விருதினைப் பெற்றிருக்கிறது டுலெட்.

இந்தப் படத்தை இயக்கியிருப்பவர் பிரபல ஒளிப்பதிவாளர் செழியன். கல்லூரி, பரதேசி, ஜோக்கர் என முக்கியப் படங்களின் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியவர் செழியன். டுலெட் படத்தில் ஷீலா, சந்தோஷ், தருண் என புதியவர்கள்தான் நடித்துள்ளனர்.

‘டூலெட்’ என்ற வார்த்தை, சென்னை போன்ற பெருநகரங்களில் வசிக்கக்கூடிய நடுத்தர வர்க்கத்து மக்களுக்கு பெரும் மன அழுத்தத்தைக் கொடுக்கக் கூடியது. 2007ல் மென்பொருள் நிறுவனங்கள் பெருவாரியாக நுழைந்தபோது இந்த நகரம் வீடு சார்ந்த ஒரு பிரச்சனையச் எதிர்கொண்டதன் சாட்சியாக நானும் இருந்தேன். அதைப் பதிவு செய்து பார்க்கலாம் என்றுதான் இந்தப்படத்தை எடுத்தோம். ஒரு இளம் தம்பதி, அவர்களது மகன் ஆகியோரை இந்த டுலெட் என்கிற வார்த்தை எப்படி அல்லாட வைக்கிறது என்பதுதான் படம்,’ என இந்தப் படம் குறித்து முன்பொரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார் செழியன்.

இன்னமும் திரைக்கு வராத இந்தப் படம் திரையிடப்பட்ட விழாக்கள் அனைத்திலும் நிறைய விருதுகளைக் குவித்திருக்கிறது. இப்போது தேசிய விருதையும் வென்றுவிட்டது.

Leave a Response