இயக்குனராக அவதாரம் எடுக்கும் கலாபக்காதலன் நடிகை..

கலாபக்காதலன், உளியின் ஓசை, எங்கள் ஆசான் உள்ளிட்ட பல படங்களில் நாயகியாக நடித்தவர் அக்சயா. தற்போது யாளி என்றொரு படத்தை இயக்கி  நடித்து வருகிறார்.

யாளி திரைப்படத்தில் ஊர்வசி, மனோபாலா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். தமன் நாயகனாக நடிக்க, இரண்டாவது நாயகனாக புதுமுகம் அர்ஜூன் நடித்துள்ளார்.

எஸ்.அர்.ராம்  இசை அமைக்க, வைரமுத்து பாடல்கள் எழுத , ராமராஜ் ஒளிப்பதிவு செய்ய எபி கிரியேசியன் சார்பாக டி.பாலச்சந்திரன் தாயாரிக்க, அக்சயா இப்படத்தை இயக்குகிறார்.

நடன இயக்குனர்  காதல் கந்தாஸ் சில காரணங்களால் இப்படத்தில் இருந்து விலக, அந்த நடன இயக்குனர் வேலையையும் தலே முன்வந்து செய்திருக்கிறார் அக்சயா.

போஸ்ட் ப்ரோடேக்சன்  வேலைகள் நடந்து கொண்டு இருக்க. டிஜிட்டல் கட்டணப் பிரச்னைகள் முடிவுக்கு வந்தால் “மே மாதம்” இசை வெளிட திட்டமிட்டுள்ளனர். விரைவில் இந்த படம் திரைக்கு வர இருக்கிறது..

Leave a Response