தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூத்துக்குடி மக்களுக்காக வகுப்புகளை புறக்கணித்த மதுரை சௌராஷ்டிரா கல்லூாி மாணவர்கள் !

தூத்துக்குடி மாவட்டத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் ஸ்டொ்லைட் ஆலையால் அப்பகுதியில் நிலத்தடி நீா் பாதிப்பு, குடிநீா் பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படுவதாக குற்றம் சாட்டப்பட்டு வந்தது. இது ஒருபுறம் இருக்க ஆலையை மேலும் 4 மடங்கு விாிவாக்கம் செய்ய ஸ்டொ்லைட் ஆலை தரப்பில் முடிவு செய்யப்பட்டது.

தற்போது செயல்பட்டு வரும் ஆலையால் தூத்துக்குடியில் நிலத்தடி நீா் பாதிப்பு, குடிநீா் சீா்கேடு, நோய் தொற்று உள்ளிட்ட பிரச்சினைகளை எதிா்கொண்டு வரும் பொதுமக்கள் ஆலை விாிவாக்கப்பட்டால் பாதிப்பு மேலும் அதிகாிக்கும் என்று அச்சம் தொிவித்துள்ளனா்.

ஆலை விாிவாக்கத்திற்கு எதிா்ப்பு தொிவித்தும், தற்போது செயல்பாட்டில் இருக்கக்கூடிய ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் அம்மாவட்ட மக்கள் தொடா்ந்து 46வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

பொதுமக்களின் போராட்டக்களம் வீரியம் அடைந்துள்ள நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவா் கமல்ஹாசன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவா்களை நோில் சந்தித்து ஆதரவு தொிவிக்க உள்ளதாக தொிவித்துள்ளார். மேலும், ஆலை பராமாிப்பு காரணமாக ஆலை 15 நாட்கள் மூடப்படும் என்று நிா்வாகம் தரப்பில் தொிவிக்கப்பட்டுள்ளது.

பராமாிப்பு காரணமாக ஆலையில் தாமிரம் தயாாிப்பு பணிகளும் 15 நாள்களுக்கு தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக நிா்வாகம் தொிவித்துள்ளது. பொதுமக்களின் போராட்டத்தை நீா்த்துப்போக செய்யவே ஆலைக்கு 15 நாள்கள் விடுமுறை விடப்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனா். பொதுமக்களின் போராட்டம் தற்போது 47வது நாளாக இரவு, பகலாக நடைபெற்று வருகிறது.

மேலும் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூத்துக்குடி மக்களுக்கு ஆதரவாக மதுரை சௌராஷ்டிரா கல்லூாி மாணவா்களும் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

Leave a Response