காவிரி மேலாண்மை : ஈரோடு மாவட்டத்தில் 1000 வீடுகளில் கருப்புக் கொடி கட்டி போராட்டம் !

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும் வரை ஈரோடு மாவட்டத்தில் 1000 வீடுகளில் கருப்புக் கொடி கட்டி பாமகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

காவிரி நதியை ஒழுங்குமுறைப்படுத்த ஒரு திட்டத்தை 6 வாரங்களுக்குள் நிறைவேற்ற வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் 6 வாரங்கள் ஆகியும் அந்த உத்தரவை மத்திய அரசு செயல்படுத்தவில்லை.

நேற்றுடன் நீதிமன்றம் விதித்த கெடுவும் நிறைவடைந்துவிட்டது. இதனால் தமிழகமே கொந்தளிப்பில் உள்ளது. இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டம் நடத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்டுக் கொண்டார்.

அதன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள பாமகவினர் 1000 வீடுகளில் கருப்பு கொடி கட்டியுள்ளனர். தமிழகத்தின் கோரிக்கை நிறைவேறும் வரை இந்த போராட்டம் தொடரும் என்றும் கூறியுள்ளனர்.

Leave a Response