‘தமிழ்நாடு, மத்திய அரசின் குப்பை மேடாக மாறிவருகிறது’ – இயக்குநர் அமீர்

‘மத்திய அரசின் குப்பை மேடாக தமிழ்நாடு மாறிவருகிறது’ என இயக்குநர் அமீர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் அமைக்கக் கூடாது என அம்மாவட்ட மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், இயக்குநர் அமீரும் அரசை விமர்சித்து ட்விட்டரில் தன்னுடைய கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

“தமிழ்நாடு, மத்திய அரசின் குப்பை மேடாக மாறி வருவதுதான் நிதர்சனமான உண்மை. கூடங்குளம், ஓ.என்.ஜி.சி., ஹைட்ரோ கார்பன், மீத்தேன், ஸ்டெர்லைட், நியூட்ரினோ… இப்படி எந்தத் திட்டங்கள் யார் ஆட்சியில் கொண்டு வரப்பட்டாலும், அந்த மக்களை அரசு மதிப்பதுமில்லை.

அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு செவிசாய்ப்பதும் இல்லை. கேட்டால் இது ஜனநாயக நாடாம், மக்கள் ஆட்சி நடைபெறுகிறதாம். வெல்லட்டும் மக்களின் புரட்சி. வெல்லட்டும் ஜனநாயகி எழுச்சி” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் இயக்குநர் அமீர்…

Leave a Response