கள்ளழகர் இறங்கும் வைகை ஆற்று பகுதியில் சீரமைப்பு பணிகள் தீவிரம் !

மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவதால் அப்பகுதியை தூய்மைப்படுத்தும் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகின்றது.

மீனாட்சி அம்மன் கோவில், அழகர் கோவில் சித்திரைத் திருவிழா அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது. சித்திரை திருவிழாவின் போது லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்ளும் கள்ளழகர் ஆழ்வார்புரம் வைகை ஆற்றில் இறங்கும் வைபவ நிகழ்ச்சி நடைபெறும்.

வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் பகுதியில் மாநகராட்சியின் சார்பில் 24 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சுவாமி இறங்குவதற்கு வசதியாக உருளை குழாய்கள் அமைத்து சாய்வு தளம் அமைத்தல் பணி, தண்ணீர் நிரப்புவதற்கான தொட்டி அமைத்தல் பணி உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகளை கமிஷனர் அனீஷ் சேகர் நேரில் சென்று பார்வையிட்டார்.

Leave a Response