திரௌபதி அம்மன் கோவில் திருக்கல்யாண உற்சவம் !

திருத்தணி காந்தி நகரில் உள்ள திரௌபதி அம்மன் கோவிலில் தீமிதி உற்சவம் வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு மூலவர் அம்மனுக்கு சந்தனக் காப்பு மற்றும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

இதையடுத்து, காசிநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த பக்தர்கள் தங்கள் உடலில் அலகு குத்தி உற்சவர் அம்மன் தேரை இழுத்துச் சென்று நேர்த்திக்கடனை செலுத்தினர்.  அப்போது, பெண்கள் உற்சவர் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.

அதைத் தொடர்ந்து, மார்ச் 28 -ஆம் தேதி திரௌபதி அம்மன் திருக்கல்யாணம், அன்னதானம் மற்றும் இரவு அம்மன் திருவீதியுலாவும் நடைபெறவுள்ளது. அடுத்து, 30-ஆம் தேதி சுபத்திரை அம்மன் திருக்கல்யாணமும், இரவு புஷ்பப் பல்லக்கில் திருவீதியுலாவும் நடைபெறும்.

ஏப்ரல் 8-ஆம் தேதி காலை துரியோதனன் படுகளம் நிகழ்வும், மாலை தீமிதி உற்சவமும் நடைபெறும். 9-ஆம் தேதி தருமர் பட்டாபிஷேகம் மற்றும் தீர்த்தவாரியுடன் உற்சவம் நிறைவடைகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுவினர் செய்து வருகின்றனர்.

Leave a Response