முதுமலை வனப்பகுதியில் இருக்கைகள் சேதம் : சீரமைக்க பொதுமக்களும், சுற்றுலா ஆர்வலர்களும் வலியுறுத்தல் !

muthu

ஊட்டியில் இருந்து கூடலூர் மற்றும் முதுமலை செல்லும் சாலையோரங்களில் வனப்பகுதிகள் உள்ளன.  இந்த வனங்களின் நடுவே அமர்ந்து  பெரும்பாலானவர்கள் உணவு உட்கொள்வது, இளைப்பாருவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.

சுற்றுலா பயணிகள் அடர்ந்த வனத்திற்குள் செல்லாதவாறு, புல் வெளிகள் உள்ள இடங்களில் வனத்துறையினர் இருக்கைகள் அமைத்து கொடுத்தனர். அந்த இருக்கைகளில் அமர்ந்து உணவு உட்கொள்வது மற்றும் இளைப்பாறுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், இந்த இருக்கைகள் அனைத்தும் தற்போது உடைந்து போன நிலையில், அந்த இருக்கைகளை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், சமூக வீரோதிகளின் கூடாரமாகவும் மாறியுள்ளது. எனவே, தலைகுந்தா  வனப்பகுதிகளில் உடைந்துள்ள இருக்கைகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சுற்றுலா ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Leave a Response